கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் | 33 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 21.01.2021
Krishnagiri District Government Jobs 2021 | Overseer/ Junior Drafting Officer Post | 33 Vacancies | Application Form | Last Date: 21.01.2021 | krishnagiri.nic.in
Latest Krishnagiri District Government Jobs 2021 Notification – கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் (Rural Development & Panchayat Unit, Krishnagiri) ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு (ந.க.எண். 26309/ 2020/கே4) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிப்பானது கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி பணிப்பார்வையாளர் (Overseer)/ இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Drafting Officer) பணிக்கு வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள வெற்றிடங்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆகும். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட பணிகளுக்கு நேரடி நியமனம் (Direct Appointment) மூலம் வெற்றிடங்களை நிறைவு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் (krishnagiri.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு (வளர்ச்சி) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.01.2021. காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகப்பட்ச வயது 35 ஆண்டுகள்.
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- பட்டயப்படிப்பில் (Diploma) குடிமுறைப் பொறியியலில் (Civil Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தொலைதூர கல்வி முறை (Distance Mode) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- எழுத்துத் தேர்வு (Written test).
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் கிஷ்ணகிரி மாவட்ட அரசு வலைதளம் (krishnagiri.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் (வளர்ச்சிப் பிரிவு) அலுவலக நேரத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
- அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட ஆட்சிதலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு), அறை எண்.58, மாவட்டம் ஆட்சியரகம், கிருஷ்ணகிரி.
- விண்ணப்பங்களை 21/01/2021 தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு எண் | ந.க.எண். 26309/2020/கே4 |
பதவிகள் | பணிப் பார்வையாளர் (Overseer)/ இளநிலை வரைதொழில் அலுவலர் |
காலியிடங்கள் | 33 |
பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு (Rural Development & Panchayat Unit, Krishnagiri) |
ஊதியம் | ரூ.35,400 – ரூ.1,12,400/- |
விண்ணப்ப முறை | நேரில்/ பதிவஞ்சல் (Registered Post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 21.01.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) )/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.