காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு | உறுப்பினர் பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.11.2021
Kanchipuram District Government Jobs 2021 | Member Post | 02 Vacancies | Application Form | Last Date: 27.11.2021 | kancheepuram.nic.in
Latest Kanchipuram District Government Jobs 2021 Notification – காஞ்சிபுரம் மாவட்ட அரசு வலைதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி இளைஞர் நீதி குழுமத்திற்கு (Juvenile Justice Board) கீழ் பணிபுரிய 01 பெண் உட்பட 02 சமூக நல உறுப்பினர்கள் (Social Worker Member) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மதிப்பூதிய அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) காஞ்சிபுரம் மாவட்ட அரசு வலைதளத்தில் (kancheepuram.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.11.2021 ஆகும். மேலும் விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044 – 27234950.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- குறைந்தபட்ச வயது 35 ஆண்டுகள்.
- அதிகபட்ச வயது 65 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- ஏதேனும் ஒரு பிரிவில் (குழந்தை உளவியல்/ மனநல மருத்துவம்/ சமூகவியல்/ சட்டம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 07 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) காஞ்சிபுரம் மாவட்ட அரசு வலைதளத்தில் (kancheepuram.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான நகல்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317 K.T.S. மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 502.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.11.2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | இளைஞர் நீதி குழுமம் (Juvenile Justice Board) |
பதவிகள் | உறுப்பினர்கள் (Members) |
காலியிடம்/ காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 27.11.2021 |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form)/ அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.