கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2022 | பாதுகாப்பு அலுவலர் மற்றும் சில பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.01.2022
Kallakurichi District Government Jobs 2022 | PO, Legal cum Probation Officer, OW & various Posts | 11 Vacancies | Application Form | Last Date: 27.01.2022 | kallakurichi.nic.in
Latest Kallakurichi District Government Jobs 2022 Notification – கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வலைதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி சமூக பாதுகாப்பு துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் (District Child Protection Society) கீழ் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் (Protection Officer), சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer), ஆற்றுப்படுத்துநர் (Counsellor), சமூகப்பணியாளர் (Social Worker), கணக்காளர் (Accountant), தகவல் பகுப்பாளார் (Data Analyst), உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) மற்றும் புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பதவிகளுக்கு 11 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ. 8,000/- முதல் ரூ. 21,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பப் படிவத்தை (Application Form) கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வலைதளத்தில் (kallakurichi.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த (Contract) அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Protection Officer | 02 |
Legal cum Probation Officer | 01 |
Counsellor | 01 |
Social Worker | 02 |
Accountant | 01 |
Data Analyst | 01 |
Assistant cum Data Entry Operator | 01 |
Outreach Worker | 02 |
மொத்தம் (Total) | 11 |
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.
- ஓய்வு பெற்ற நபர்களுக்கு அதிகபட்ச வயது 62 ஆண்டுகள்.
- வயது தளர்வு விவரங்களை பற்றி அறிய அறிவிப்பை காணலாம்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- பத்தாம் (அ) பன்னிரண்டாம் வகுப்பு/ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் L.L.B/ பட்டயப்படிப்பு (Diploma)/ இளங்கலை/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 01 முதல் 03 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணிக்கு விண்ணப்பிப்பவர் குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பப் படிவத்தை (Application Form) கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வலைதளத்தில் (kallakurichi.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Passport size photograph) இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, No.156, Sarathambal Street, Nithyanandha Nagar, Vazhuthureddy, Villupuram – 605 401.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (District Child Protection Society) |
பதவிகள் | Protection Officer, Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant cum Data Entry Operator & Outreach Worker |
காலியிடங்கள் | 11 |
ஊதியம் | ரூ. 8,000 – ரூ. 21,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 27.01.2022 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) / விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.
Job details
Job details .. Kallakurichi