IOCL Recruitment 2020 | 482 Apprentices Vacancies | Apply Online

இந்தியன் ஆயில் நிறுவன வேலைவாய்ப்பு 2020 | தொழில்பழகுநர் பயிற்சி | 482 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.11.2020

IOCL Recruitment

IOCL Recruitment 2020 | Apprenticeship Training | 482 Vacancies | Apply Online | Last Date: 22.11.2020 | iocl.com

Latest IOCL Recruitment 2020 NotificationIOCL என்று அழைக்கப்படும் Indian Oil Corporation Limited தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (NOTIFICATION No. PL/HR/ESTB/ APPR-2020) ஒன்றை 30.10.2020 தேதி அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தொழில் பழகுநர் (Apprentice) பயிற்சிக்கு மாநில வாரியாக மொத்தம் 482 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அதில் 32 காலியிடங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வலைதளம் (plis.indianoilpipelines.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தை (Online Application Procedure) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.11.2020. இந்த தொழில் பழகுநர் பயிற்சியானது தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத துறைகளில் அளிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பின் படி Technician Apprentice (Elec/ Mech/ T&I) பயிற்சிக்கு ஒரு வருடமும், Trade Apprentices (Assistant HR/ Accountant) பயிற்சிக்கு ஒரு வருடமும் மற்றும் Data Entry Operator & Domestic Data Entry Operator பயிற்சிக்கு 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

இந்தியன் ஆயில் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகப் பட்ச வயது 24 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 30.10.2020.
  • மேலும் வயது தளர்வு விவரங்களை பெற IOCL விளம்பரத்தை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • பனிரெண்டாம் வகுப்பு/ தொழிற்பயிற்சி (ITI) + பட்டயப் படிப்பு (Diploma)/ பட்டப் படிப்பு (Bachelor Degree) முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதி விவரங்களை பெற IOCL விளம்பரத்தை காணவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • மொத்தம் 100 கேள்விகள் கொள்குறி வினாக்களாக (Multiple Choice Questions) 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

தேர்வு பாடத்திட்டம் (Exam Syllabus):-

  • General Aptitude and Reasoning, General English, Numerical Aptitude and General Knowledge, etc.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • இந்த தொழில் பழகுநர் பயிற்சிக்கு (Apprenticeship Training) விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வலைதளம் (plis.indianoilpipelines.in) சென்று இணைய வழியில் (Online) தங்கள் விண்ணப்பத்தை 22.11.2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்போர் தங்களுக்கென்று மின்னஞ்சல் முகவரி வைத்திருக்க வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்ப்பின் பொழுது இந்த படிவம் தேவைப்படும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் IOCL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)
அறிவிப்பு எண் PL/HR/ESTB/ APPR-2020
பயிற்சி தொழில் பழகுநர் (Apprentices)
காலியிடங்கள் 482
பணியிடம்/ பணியிடங்கள் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.11.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு