IOB Recruitment 2021 | Latest Vacancy | Apply Online

IOB வேலைவாய்ப்பு 2021 | முதுநிலை பொருளாதார நிபுணர் பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.04.2021

IOB Recruitment

IOB Recruitment 2021 | Senior Economist Post | 01 Vacancy | Apply Online | Last Date: 29.04.2021 | iob.in

Latest IOB Recruitment 2021 Notification – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank – IOB) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (Advt No.: IOB/HRDD/CONTRACT RECT/01/2021-22) ஒன்றை 18.04.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி முதுநிலை பொருளாதார நிபுணர் (Senior Economist) பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த (Contract Basis) பணிநியமன அடிப்படையில் மூன்று  வருடங்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ.1,00,000/- மற்றும் சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வலைதளத்தில் (iob.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 29.04.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

IOB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 62 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 01.04.2021.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பொருளியல் (Economics) பிரிவில் முதுநிலை (PG) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • பொருளாதார நிபுணராக வணிக வங்கி (Commercial Bank)/ நிதி நிறுவனம் (Financial Institution)/ பிற புகழ்பெற்ற கார்ப்பரேட் அமைப்புகளில் பத்து வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • சிறந்த தகவல்தொடர்பு திறன்களைக் (Communication Skills) கொண்டிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் IOB அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த பொருளாதார நிபுணர் (Senior Economist) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)/ காணொளி காட்சி மூலம் நேர்காணல் (Interview through video conference)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
  • இதில் பொருள் அறிவு (Subject Knowledge), தொடர்பு திறன்(Communication Skill), விளக்கக்காட்சி மற்றும் அணுகுமுறை (Presentation & Attitude) தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.

அறிவிப்பு கட்டணங்கள் (Intimation Charges):-

  • அறிவிப்பு கட்டணம் ரூ. 1000/- இணைய வழி (Online) மூலம் செலுத்த வேண்டும்.
  • இணைய வழி (Online) மூலம் அறிவிப்பு கட்டணம் செலுத்த கடைசி நாள் 29.04.2021.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் IOB அதிகாரப்பூர்வ வலைத்தளம் (iob.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் போது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு புகைப்படம் (Photograph), கையொப்பம் (Signature), பிறப்பு சான்றிதழ், SSC சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை PDF முறையில் ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 29.04.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – Indian Overseas Bank (IOB)
அறிவிப்பு எண் Advt No.: IOB/HRDD/ CONTRACT RECT/ 01/2021-22
பதவி முதுநிலை பொருளாதார நிபுணர் (Senior Economist)
காலியிடம் 01
பணியிடம் சென்னை
ஒருங்கிணைந்த ஊதியம் ரூ. 1,00,000/-
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 29.04.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு