Intelligence Bureau Recruitment 2021 | 2000 IB ACIO Vacancies | Apply Online

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2021 | உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவி | 2000 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.01.2021

Intelligence Bureau Recruitment

Intelligence Bureau Recruitment 2021 | ACIO-II/Exe Post | 2000 IB Vacancies | Apply Online | Last Date: 09.01.2021 | mha.gov.in

Latest IB – Intelligence Bureau Recruitment 2021 Notification – இந்திய உளவுத் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புச் செய்தியின் படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (Assistant Central Intelligence Officer – Grade II/ Executive) பணிக்கு 2000 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.01.2020 ஆகும்.

விண்ணப்பங்களை 19.12.2020 தேதி முதல் இணைய வழியில் சமர்ப்பிக்கலாம். அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது. இந்த காலியிடங்கள் தகுதியானவர்களை கொண்டு நிரப்ப தேர்வு ஒன்று நடத்தப்படும். இந்த தேர்வானது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். பணியில் சேரும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.44,900 முதல் 1,42,400 வரை வழங்கப்படும்.

உளவுத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகப் பட்ச வயது 27 ஆண்டுகள்.
  • வயது தளர்வு விவரங்களை பெற இந்திய உளவுத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பட்டம் (Graduation) பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படும் தகுதியாகும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • முதல் பகுதி (Tier-I) – இணையவழி (Online) தேர்வு (Objective Type)
  • இரண்டாம் பகுதி (Tier-II) – விரிவுரை தேர்வு (Descriptive Type)
  • மூன்றாம் பகுதி (Tier-III) – நேர்காணல் (Interview)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • முதல் பகுதி (Tier-I) General Awareness, Quantitative Aptitude, Numerical/ Analytical/ Logical Ability & Reasoning, English language மற்றும் General studies ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றில் 20 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 100 மதிப்பெண்கள். இந்த தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும்.
  • தவறாக விடையளித்தல் ஒரு விடைக்கு 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.

தேர்வுக் கட்டணம் (Examination Fee):-

  • General/ EWS/ OBC பிரிவினர்களுக்கு, ரூ.600/-
  • SC/ ST/ Female/ ExSM பிரிவினர்களுக்கு, ரூ.100/-
  • தேர்வுக் கட்டணத்தை இணைய வழியிலும் மற்றும் வங்கியிலும் கட்டலாம்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் இணைய வழியில் (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க சரியான மின்னஞ்சல் முகவரி (E-mail Address) மற்றும் தொலைபேசி எண் (Mobile Number) வைத்திருக்க வேண்டும்.
  • முதலில் இணைய வழியில் பதிவு (Registration) செய்ய வேண்டும் பிறகு பதிவு விவரங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் போது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அளவில் உள்ள புகைப்படம் (Photograph) மற்றும் கையொப்பம் (Signature) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.01.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்திய உளவுத் துறை (புலனாய்வு பிரிவு) வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்திய உளவுத் துறை (Intelligence Bureau)
பதவி Assistant Central Intelligence Officer
காலியிடங்கள் 2000
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
ஊதியம் ரூ.44,900 – 1,42,400
தேர்வு Assistant Central Intelligence Officer – Grade II/ Executive Exam 2020 (ACIO – Gr.II/ Exe Exam 2020)
கட்டணம் செலுத்தும் முறை Online/ Offline
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 09.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு