இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 | INCET | Tradesman Mate | 1159 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.03.2021
Indian Navy Recruitment 2021 | INCET | Tradesman mate Posts | 1159 Vacancies | Apply Online | Last Date: 07.03.2021 | joinindiannavy.gov.in
Latest Indian Navy Recruitment 2021 Notification – இந்திய கடற்படை (Indian Navy) 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கடற்படை சிவிலியன் நுழைவுத் தேர்வு (Indian Navy Civilian Entrance Test – INCET) அறிவிப்பை (INCET-TMM-01/2021) வெளியிட்டுள்ளது. இந்த இந்திய கடற்படை அறிவிப்பின்படி Tradesman Mate காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1159. இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த பதவிக்கு ஊதியமாக ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்திய கடற்படை வலைதளத்தில் (joinindiannavy.gov.in) இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.03.2021. இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- விண்ணப்பதாரருக்கு வயதானது 18 முதல் 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- வயது தளர்வு விவரங்களை பெற அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- பத்தாம் வகுப்பு / ITI படித்திருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- இணையவழி கணினி தேர்வு (Online Computer Based Examination)
தேர்வு விவரம் (Exam Pattern):-
- இணைய வழி கணினி தேர்வானது (Online Computer Based Examination) இணைய (Online) வழியாக Objective Test அடிப்படையில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
- இதில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (General Intelligence and Reasoning), எண் திறன்/ அளவறியுந் திறன் (Numerical Aptitude / Quantitative ability), பொது ஆங்கிலம் & புரிதல் (General English & Comprehension) மற்றும் பொது விழிப்புணர்வு (General Awareness) ஆகியவை தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும்.
தேர்வுக் கட்டணம் (Examination Fee):-
- தேர்வுக் கட்டணம் ரூ.205/- இணைய வழி (Visa/ Master/ RuPay Credit/ Debit Card/ UPI) மூலம் செலுத்தலாம்.
- SC/ ST/ PwBDs/ ESM/ பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்திய கடற்படை வலைதளத்தில் (joinindiannavy.gov.in) இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படும் (Photograph), கையொப்பம் (Signature), கல்வித் தகுதி, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகலை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 22/02/2021 முதல் 07/03/2021 வரை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்திய கடற்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | இந்திய கடற்படை (Indian Navy) |
அறிவிப்பு எண் | INCET – TMM – 01/2021 |
பதவிகள் | Tradesman Mate |
காலியிடங்கள் | 1159 |
பணியிடம் | இந்தியாவில் எங்கும் |
ஊதியம் | ரூ.18,000 – ரூ.56,900/- |
தேர்வு | Indian Navy Civilian Entrance Test – INCET |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.03.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
விண்ணப்பிக்க (Online Application) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.