Indian Coast Guard Recruitment 2021 | 50 AC Vacancies | Apply Online

இந்தியக் கடலோரக் காவல்படை வேலைவாய்ப்பு 2021 | உதவி படைத்தலைவர் பதவி | 50 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.07.2021

Indian Coast Guard Recruitment

Indian Coast Guard Recruitment 2021 | Assistant Commandant Post (01/2022) | 50 Vacancies | Apply Online | Last Date: 14.07.2021 | joinindiancoastguard.gov.in

Latest Indian Coast Guard Recruitment 2021 Notification – இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Assistant Commandant (01/2022) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 50 ஆகும். இதில் 40 காலியிடங்கள் பொதுப் பணி (General Duty) பிரிவிற்கும் மற்றும் 10 காலியிடங்கள் தொழிநுட்பம் (Technical) பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக விருப்பமுள்ள இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்தியக் கடலோரக் காவல்படை வலைதளத்தில் (joinindiancoastguard.gov.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14.07.2021. இந்த ஆட்சேர்ப்புக்கு இறுதி ஆண்டு முடித்தவர்கள் அல்லது இறுதித் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். முதல் நிலை தேர்வானது ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இத்தேர்விற்கான அனுமதி அட்டை (Admit Card) ஜூலை 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியக் கடலோரக் காவல்படை வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • 01.07.1997 தேதியிலிருந்து 30.06.2001 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • வயது தளர்வு விவரங்களை பெற இந்தியக் கடலோரக் காவல்படை அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • General Duty – 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் இயற்பியலை பாடமாகக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
  • Technical – 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலை பாடமாகக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • முதல் நிலைத் தேர்வு (Preliminary Selection)
    • Mental Ability Test/ Cognitive Aptitude Test
    • Picture Perception & Discussion Test (PP&DT)
  • இறுதித் தேர்வு (Final Selection)
    • Psychological Test
    • Group Task
    • Interview (Personality test)

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் ICG வலைதளத்திற்கு (joinindiancoastguard.gov.in) சென்று இணைய வழியில் மட்டுமே (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 04/07/2021 முதல் 14/07/2021 வரை சமர்ப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க நடப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் கட்டாயம் தேவைப்படும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்தியக் கடலோரக் காவல்படையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard)
பதவிகள் Assistant Commandant
காலியிடங்கள் 50
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 14.07.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு