இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 | தலைமை நிதி அதிகாரி காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2021
Indian Bank Recruitment 2021 | Chief Financial Officer Post | Application Form | Last Date: 30.11.2021 | indianbank.in
Latest Indian Bank Recruitment 2021 Notification – இந்தியன் வங்கி (Indian Bank) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 08.11.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer – CFO) பதவிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு மூன்று வருடங்கள் ஒப்பந்த பணிநியமன (Contract basis) அடிப்படையில் காலியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் இந்தியன் வங்கி வலைதளம் (indianbank.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2021.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- குறைந்தபட்ச வயது 45 ஆண்டுகள்.
- அதிகபட்ச வயது 59 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்ட நாள் 01/10/2021.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- பட்டய கணக்காளராக (Chartered Accountant) இருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு சம்பத்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview).
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் இந்தியன் வங்கி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-
- விண்ணப்பக் கட்டணம் ரூ.1000/-
- SC/ ST/ Women/PWBD/ EXSM பிரிவினருக்கு – ரூ.100/-
- விண்ணப்பக் கட்டணத்தை Internet banking/ NEFT/ RTGS மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் இந்தியன் வங்கி அதிகாரப்பூர்வ வலைதளம் (indianbank.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: General Manager (CDO), Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section, 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014.
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30/11/2021.
விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்தியன் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | இந்தியன் வங்கி (Indian Bank) |
பதவிகள் | தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer – CFO) |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online)/ NEFT/ RTGS |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.11.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.