Indian Army Recruitment 2020 | 191 SSC (Tech) Vacancies | joinindianarmy.nic.in

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2020 | SSC (Tech) | 191 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.11.2020

Indian Army Recruitment

Indian Army Recruitment 2020 | SSC (Tech) Men & Women | 191 Vacancies | Apply Online | Last Date: 12.11.2020 | joinindianarmy.nic.in

Latest Indian Army Recruitment 2020 Notification – இந்திய ராணுவம் தற்போது SSC என்று அழைக்கப்படும் Short Service Commission அதாவது குறுகிய சேவை ஆணையத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மணமாகாத ஆண்கள், மணமாகாத பெண்கள் மற்றும் பாதுகாப்புப் படை பணியாளர்கள் இறந்ததினால் விதவைகளான பெண்கள் (Widows of Defence Personnel) ஆவர். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 191 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அதில் 175 காலியிடங்கள் ஆண்களுக்கும், 14 காலியிடங்கள் பெண்களுக்கும் மற்றும் 02 காலியிடங்கள் பாதுகாப்புப் படை பணியாளர்களின் விதவைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்திய ராணுவ அதிகாரபூர்வ வலைதளத்தில் (joinindianarmy.nic.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.11.2020. தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு சென்னையில் உள்ள Officers Training Academy (OTA) அதாவது அதிகாரிகள் பயிற்சி கலைக்கழகத்தில் 49 வாரங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியானது 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் 10 ஆண்டு காலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணி முடிவடையும் வரை திருமணம் செய்துகொள்ள கூடாது.

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 27 ஆண்டுகள்.
  • பாதுகாப்புப் படை பணியாளர்களின் விதவைகளுக்கு மட்டும் அதிகப்பட்ச வயது 35 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.04.2021.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் பொறியியல் (Engineering) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இறுதியாண்டு பயிலும் பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • முழு கல்வித்தகுதிகளை தெரிந்துகொள்ள இந்திய ராணுவ வேலைவாய்ப்பு விளம்பரத்தை காணவும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்

தெரிவு செய்யும் முறை (Selection Procedure):-

  • கல்வித்தகுதிகளை பொறுத்து விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு (SSB Interview) அழைக்கப்படுவர்.
  • நேர்காணல் Stage-1 மற்றும் Stage-2 என்ற இரண்டு நிலைகளை கொண்டது.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்திய ராணுவ அதிகாரப்பூர்வ வலைதளம் (joinindianarmy.nic.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • இந்திய ராணுவ வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் (Home Page) Officers Entry Apply/ Login என்ற பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்பிக்கும் முன்பு பதிவு (Registration) செய்ய வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.
  • பிறகு பதிவு விவரங்களை (Registration Details) கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.11.2020 ஆகும்.
நிறுவனம் இந்திய ராணுவம் (Indian Army)
பதவிகள்/ பயிற்சிகள் SSC (Tech) Men, SSCW (Tech) Women, SSCW (Non Tech) [Non UPSC] and SSCW(Tech)
காலியிடங்கள் 191
பயிற்சி இடம் Officers Training Academy (OTA), Chennai
சம்பளம் அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 12.11.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு  வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு