Income Tax Department Recruitment 2020 | 07 Assistant & Other Vacancies | Application Form

வருமானவரித் துறை வேலைவாய்ப்பு 2020 | சென்னை | உதவியாளர், ஆய்வாளர் மற்றும் சில பதவிகள் | 07 காலியிடங்கள் | அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Income Tax Department Recruitment

Income Tax Department Recruitment 2020 | Chennai | Assistant, Inspector & Other Posts | 07 Vacancies | Application Form | Last Date: 60 days | incometaxindia.gov.in

Latest Income Tax Department Recruitment 2020 Notification – வருமானவரித் துறை (Income Tax Department) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (02/2020-21) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான நாள் 12.11.2020. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி கண்காணிப்பாளர் (Superintentdent – Admn.), அந்தரங்கச் செயலாளர் (Private Secretary), ஆய்வாளர் (Inspector) மற்றும் உதவியாளர் (Assistant) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10 அதில் 07 காலியிடங்கள் சென்னையில் உள்ள Competent Authority, SAFEM (FOP)A & NDPSA அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதிவாய்ந்த அரசாங்க ஊழியர்கள் வருமானவரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளம் (incometaxindia.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்க  வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தற்காலிக பரிமாற்று (Deputation) முறைப்படி பணியமர்த்தப் படுவார்கள்.

வருமானவரித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Positions) காலியிடங்கள் (Vacancies)
Superintentdent (Admn.) 01
Private Secretary 01
Inspector 02
Assistant 03
மொத்தம் (Total) 07

வருமானவரித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப்பட்ச வயது 56 ஆண்டுகள்.

தேவைப்படும் தகுதிகள் (Required Qualification):-

  • மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் அல்லது நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அரசுத் துறைகளில் பணி புரிந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • முழுத் தகுதிகளை தெரிந்துகொள்ள வருமான வரித்துறை வேலைவாய்ப்பு விளம்பரத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் வருமான வரித்துறை வலைதளம் (incometaxindia.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் வருமானவரித் துறை (Income Tax Department)
அறிவிப்பு எண் 02/2020-21
பதவிகள் Superintentdent (Admn.), Private Secretary, Inspector & Assistant
காலியிடங்கள் 07
பணியிடம் சென்னை (Chennai)
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க  வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு  வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு