IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2021 | தொழில்நுட்ப அலுவலர், சுருக்கெழுத்தாளர் மற்றும் பல பதவிகள் | 337 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.07.2021
IGCAR Kalpakkam Recruitment 2021 | Technical officer, Work Assistant, Clerk & various Posts | 337 Vacancies | Apply Online | Last Date: 31.07.2021 | igcar.gov.in
Latest IGCAR Recruitment 2021 Notification – Indira Gandhi Centre for Atomic Research (IGCAR) Kalpakkam அதாவது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (IGCAR/02/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, UDC, Driver, Security Guard, Work Assistant மற்றும் Canteen attendant பதவிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 337. Stipendary Trainees அல்லாத பணிகளுக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களது பதவிகளுக்கேற்ப ஊதியமாக ரூ.18,000/- முதல் 78,800/- வரையிலும் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ IGCAR கல்பாக்கம் வலைதளத்தில் (igcar.gov.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.07.2021. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 98400 01273/ 63851 60814.
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Scientific Officer/E | 01 |
Technical Officer/E | 01 |
Scientific Officer/D | 03 |
Technical Officer/C | 41 |
Technician/B (Crane Operator) | 01 |
Stenographer Grade III | 04 |
Upper Division Clerk | 08 |
Driver (OG) | 02 |
Security Guard | 02 |
Work Assistant/A | 20 |
Canteen Attendant | 15 |
Stipendary Trainee Category – I | 68 |
Stipendary Trainee Category – II | 171 |
மொத்தம் (Total) | 337 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை IGCAR கல்பாக்கம் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
- Scientific Officer/E, Technical Officer/E மற்றும் Scientific Officer/D – அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.
- Technical Officer/C – அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
- Technician மற்றும் Canteen Attendant – அதிகபட்ச வயது 25 ஆண்டுகள்.
- Stenographer, Upper Division Clerk, Driver, Security Guard மற்றும் Work Assistant – அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்.
- Stipendary Trainee Category I – அதிகபட்ச வயது 24 ஆண்டுகள்.
- Stipendary Trainee Category II – அதிகபட்ச வயது 22 ஆண்டுகள்.
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 14/05/2021.
- வயது தளர்வு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- Scientific Officer/E – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு Ph.D உடன் பொறியியல் (Engineering)/ B.Tech/ M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Technical Officer/E – பொறியியல் (Engineering)/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Scientific Officer/D – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் Ph.D உடன் B.SC மற்றும் M.Sc அல்லது B.E/ M.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Technical Officer/C – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு M.Sc/ M.Tech/ B.E/ B.Tech/ B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Technician/B – SSC/ HSC முடித்திருக்க வேண்டும்.
- Stenographer/ Canteen Attendant – மெட்ரிகுலேசன்/ SSC அல்லது இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Upper Division Clerk – ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Driver/ Work Assistant/A – SSC/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Security Guard – SSC அல்லது ஆயுதப் படைகளிடமிருந்து இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Stipendary Trainee Category I – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் பொறியியல் (Engineering)/ பட்டயப்படிப்பு (Diploma)/ B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Stipendary Trainee Category II – SSC/ HSC மற்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தொழிற் பிரிவில் தொழிற் பயிற்சி (ITI) பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- Scientific Officer/E பதவிக்கு விண்ணப்பிப்பவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Technical Officer/E பதவிக்கு விண்ணப்பிப்பவர் 9 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுனர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் 3 ஆண்டுகள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- ஓட்டுனர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் செல்லத்தக்க இலகுரக வாகனம் (LVD) மற்றும் கனரக வாகனம் (HVD) ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுனர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் Motor Mechanism பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- Scientific Officer/E, Technical Officer/E & Scientific Officer/D – நேர்காணல் (Personal Interview).
- Stipendary Trainee Category I/ Technical Officer/C – எழுத்துத் தேர்வு (Written Test) & நேர்காணல் (Personal Interview).
- Stipendary Trainee Category II/ Technician/B – Preliminary Test, Advanced Test & Trade/ Skills Test.
- Stenographer – Objective Written Test & Stenography Skill Test.
- Upper Division Clerk – Objective Written Test & Descriptive Written Test.
- Driver – Objective Written Test & Driving Test.
- Security Guard – Physical Standard Test, Physical Test Events & Written Test.
- Canteen Attendant/ Work Assistant/A – Preliminary Test & Advanced Test.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-
- விண்ணப்பக் கட்டணம் – ரூ. 100 இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
- Scientific Officer மற்றும் Technical Officer – ரூ.300.
- Stipendary Trainee Category I – ரூ.200.
- SC/ ST/ PWD/ Ex-Service Men/ பெண்கள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ IGCAR கல்பாக்கம் வலைதளத்தில் (igcar.gov.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
- அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும் (Passport Size Photograph) மற்றும் கையொப்பம் (Signature) தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
- Scientific Officer/E, Technical Officer/E மற்றும் Scientific Officer/D பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர் தங்களது விண்ணப்பப்படிவ (Hard copy of Application) நகலை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு விரைவஞ்சல் (Speed Post) மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: Assistant Personnel Officer (Rectt.), Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam – 603 102, Chengalpattu District, Tamil Nadu.
- இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 15/04/2021 முதல் 31/07/2021 வரை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் IGCAR கல்பாக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் – Indira Gandhi Centre for Atomic Research (IGCAR) Kalpakkam |
அறிவிப்பு எண் | IGCAR/ 02/2021 |
பதவிகள் | Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Clerk, Driver, Security Guard, Work Assistant, Canteen Attendant, Stipendiary Trainee Category – I & Stipendiary Trainee Category – II |
காலியிடங்கள் | 337 |
ஊதியம் | ரூ.18,000 – 78,800/- |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online)/ விரைவஞ்சல் (Speed Post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.07.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
விண்ணப்பிக்க (Online Application) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.
Dear sir/madam.
i am also finished IRT heavy driver ..pls any driver job notification send me thank you.