IDBI Bank Recruitment 2021 | 134 SCO Vacancies | Apply Online

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2021 | அதிகாரிகள் பதவிகள் | 134 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.01.2021

IDBI Bank Recruitment

IDBI Bank Recruitment 2021 | Specialist Cadre Officers (SCO) Posts | 134 Vacancies | Apply Online | Last Date: 07.01.2021 | idbibank.in

Latest IDBI Bank Recruitment 2021 Notification – Industrial Development Bank of India (IDBI) அதாவது இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு (No.1/ 2020-21) ஒன்றை 23.12.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Specialist Cadre Officers (SCO) அதாவது Deputy General Manager, Assistant General Manager, Manager & Assistant Manager போன்ற பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 134 ஆகும். இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும், பணியமர்த்தப்படும் நபர்களுக்கு அவரவர் பதவிக்கேற்ப ஊதியமாக ரூ.23,700 முதல் ரூ.59,170 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் IDBI வங்கி வலைதளத்திற்கு (idbibank.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.01.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
DGM (Grade D) 11
AGM (Grade C) 52
Manager (Grade B) 62
Assistant Manager (Grade A) 09
மொத்தம் (Total) 134

IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.11.2020.
  • வயது தளர்வு விவரங்களை பெற IDBI வங்கி அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம்/ B.E/ B.Tech/ MCA/ CA/ MBA/ B.Sc/ B.Com/ BBA முடித்திருக்க வேண்டும்.
  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-              

  • விண்ணப்பதாரர்கள் அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் IDBI வங்கி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த SCO வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • குழு விவாதம் (Group Discussion).
  • நேர்காணல் (Interview).

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.700/- இணைய வழி (Online) மூலம் செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PWD பிரிவினர் ரூ.150/- மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் IDBI வங்கி வலைதளத்திற்கு (idbibank.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படும் (Photograph), கையொப்பம் (Signature), தற்குறிப்பு (Resume), கல்வித்தகுதி, பிறப்புச் சான்றிதழ், அனுபவம் சான்றிதழ், சாதி மற்றும் அடையாளாச் சான்றிதழ்கள் நகலை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து PDF முறையில் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.01.2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் IDBI வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி – Industrial Development Bank of India (IDBI)
அறிவிப்பு எண் 1/ 2020-21
பதவிகள் Specialist Cadre Officers – SCO
காலியிடங்கள் 134
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
ஊதியம் ரூ. 23,700 – ரூ. 59,170/-
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு