ICF Recruitment 2021 | 792 Apprentice Vacancies | Apply Online

ICF வேலைவாய்ப்பு 2021 | தொழில் பழகுநர் பயிற்சி | 792 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.10.2021

ICF Recruitment

ICF Recruitment 2021 | Apprentices | 792 Vacancies | Apply Online | Last Date: 26.10.2021 | pb.icf.gov.in

Latest ICF Recruitment 2021 Notification – Integral Coach Factory என்று அழைக்கப்படும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை தற்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship Training) அறிவிப்பு (No. PB/RR/39/App) ஒன்றை 27.09.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Freshers/ Ex-ITI அவர்களுக்கு Carpenter, Electrician, Fitter, Machinist, Painter, Welder, MLT – Radiology, MLT – Pathology மற்றும் PASAA தொழிற் பிரிவுகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 792. இப்பயிற்சிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், பயிற்சியளிக்கப்டும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக அவர்களது பதவிகளுக்கேற்ப ரூ. 6,000/- முதல் ரூ. 7,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் ICF அதிகாரப்பூர்வ வலைதளம் (pb.icf.gov.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.10.2021. இந்த பதவிகளுக்கு பயிற்சி காலம் அவர்களது பதவிகளுக்கேற்ப 01 முதல் 02 வருடங்கள் வரை இருக்கும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044-26147708. இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

ICF வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

தொழிற் பிரிவு (Trade) காலியிடங்கள் (Vacancies)
CARPENTER 81
ELECTRICIAN 145
FITTER 194
MACHINIST 57
PAINTER 83
WELDER 222
MLT – Radiology 04
MLT – Pathology 04
PASAA 02
மொத்தம் (Total) 792

ICF வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 15 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது 24 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 26/10/2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற அதிகாரப்பூரவ அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):-  

  • அறிவிப்பில் உள்ள பிரிவுகளில் பத்தாம் வகுப்பு/ பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • EX-ITI – தொழில் பயிற்சிக்காக தேசிய/ மாநில கவுன்சிலால் (National/ State council) அங்கீகரிப்பட்ட தேசிய வர்த்தக சான்றிதழ் (National Trade Certificate) பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் சென்னை ICF அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

கட்டணம் (Processing Fee):-

  • SC/ ST/ PwBD/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டணமாக ரூ.100 + சேவை கட்டணம் இணைய வழியில் (Online)  செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் ICF (pb.icf.gov.in) வலைதளத்திற்கு சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.10.2021.
  • விண்ணப்பத்தார்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் ICF அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை – Integral Coach Factory (ICF)
அறிவிப்பு எண் No. PB/RR/39/App
பதவிகள் Apprentices
காலியிடங்கள் 792
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) / விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு