IBPS SO வேலைவாய்ப்பு 2021 | சிறப்பு அதிகாரிகள் பதவிகள் | 1828 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.11.2021
IBPS SO Recruitment 2021 | Specialist Officers Posts | 1828 Vacancies | Apply Online | Last Date: 23.11.2021 | ibps.in
Latest IBPS SO Recruitment 2021 Notification – Institute of Banking Personnel Selection (IBPS) அதாவது வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் 2022-23 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1828. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் IBPS வலைதளத்திற்கு (ibps.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 23.11.2021. இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இணைய வழித் தேர்வு (Online exam) நடைபெறும். இந்த தேர்வானது 26.12.2021 மற்றும் 30.01.2022 நடைபெறும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.
IBPS SO வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
I.T. Officer | 220 |
Agricultural Field Officer | 884 |
Rajbhasha Adhikari | 84 |
Law Officer | 44 |
HR/Personnel Officer | 61 |
Marketing Officer | 535 |
மொத்தம் (Total) | 1828 |
IBPS SO வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள்.
- அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 23.11.2021.
- வயது தளர்வு விவரங்களைப் பெற IBPS SO அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- அறிவிப்பில் குறிப்பிட்ட பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை/ பொறியியல் (Engineering)/ LLB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)
- முதன்மைத் தேர்வு (Main Examination)
- நேர்காணல் (Interview)
தேர்வு விவரம் (Exam Pattern):-
- முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) 125 மதிப்பெண்களுக்கு 120 நிமிடங்கள் இணைய (Online) வழியில் நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language), அளவறியுந் திறன் (Quantitative Aptitude), பகுத்தறிவுத் திறன் (Reasoning Ability) மற்றும் வங்கித் தொழில் பற்றிய பொது விழிப்புணர்வு (General Awareness with Special Reference to Banking Industry) தொடர்பாக 150 வினாக்கள் கேட்கப்படும்.
- முதன்மைத் தேர்வு (Main Examination) 60 மதிப்பெண்களுக்கு 45 நிமிடங்கள் இணைய (Online) வழியில் நடைபெறும். இதில் தொழில்முறை அறிவு (Professional Knowledge) தொடர்பாக 60 வினாக்கள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-
- விண்ணப்பக் கட்டணம் ரூ.850/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
- SC/ ST/ PWBD பிரிவினர் ரூ.175/- செலுத்தினால் போதுமானது.
முக்கிய தேதிகள் (Tentative dates):-
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 23/11/2021.
- இணைய வழியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – 23/11/2021.
- தேர்வு நாள் (முதல்நிலை) – 26.12.2021.
- தேர்வு நாள் (முதன்மை) – 30.01.2022
- நேர்காணல் – பிப்ரவரி/ மார்ச் 2022
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பதாரர்கள் IBPS வலைதளத்திற்கு (ibps.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படம் (Photograph), கையொப்பம் (Signature), இடது கை கட்டை விரல் பதிவு (Left-Hand Thumb Impression), கையால் எழுதப்பட்ட பிரகடனம் (Hand Written Declaration) ஆகியவற்றை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
- இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.11.2021.
விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் IBPS SO அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் – Institute of Banking Personnel Selection (IBPS) |
பதவிகள் | சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers) |
காலியிடம்/ காலியிடங்கள் | 1828 |
தேர்வு | இணைய வழித் தேர்வு (Online exam) |
தேர்வு நாட்கள் | 26.12.2021 மற்றும் 30.01.2022 |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 23.11.2021 |
விண்ணப்பிக்க (Online Application)/ அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.