GAIL Recruitment 2021 | 25 ET Vacancies | Apply Online

GAIL வேலைவாய்ப்பு 2021 | எக்சிக்யூட்டிவ் பயிற்சியர் பதவி | 25 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.03.2021

GAIL Recruitment

GAIL Recruitment 2021 | Executive Trainees Posts | 25 Vacancies | Apply Online | Last Date: 16.03.2021 | gailonline.com

Latest GAIL Recruitment 2021 Notification – GAIL என்று அழைக்கப்படும் Gas Authority of India Limited அதாவது இந்திய எரிவாயு ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (GAIL/ OPEN/ ET/ 1A/ 2020) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Executive Trainee (Chemical) மற்றும் Executive Trainee (Instrumentation) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 25. இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் நபர்கள் GATE தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.60,000 முதல் ரூ.1,80,000/- வரையிலும் மற்றும் இதர படிகளும் சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ GAIL வலைதளத்தில் (gailonline.com) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.03.2021. விண்ணப்பதாரர் GATE தேர்விற்கு பதிவு செய்த பதிவு எண்ணை (Reg. No) கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

GAIL வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 26 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 16/03/2021.
  • வயது தளர்வு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள GAIL அறிவிப்பை காணவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ GAIL வலைதளத்தில் (gailonline.com) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் GATE தேர்விற்கு பதிவு செய்த பதிவு எண்ணை (Reg. No) கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • GATE தேர்வின் பதிவு எண் (Reg. No) இல்லாமல் பெறப்படும் இணைய வழி விண்ணப்பங்கள் (Online Application) நிராகரிக்கப்படும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.03.2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் GAIL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் GAIL
அறிவிப்பு எண் GAIL/ OPEN/ ET/ 1A/ 2020
பதவிகள் Executive Trainees (Chemical & Instrumentation)
காலியிடங்கள் 25
ஊதியம் ரூ.60,000 – ரூ.1,80,000/-
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.03.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு