EXIM வங்கி வேலைவாய்ப்பு 2020 | மேலாண்மை பயிற்சியர் பதவி | 60 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.12.2020
EXIM Bank Recruitment 2020 | Management Trainee Post | 60 Vacancies | Apply Online | Last Date: 31.12.2020 | eximbankindia.in
Latest EXIM Bank Recruitment 2020 Notification – Export–Import Bank of India (EXIM Bank) அதாவது இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மேலாண்மை பயிற்சியர் (Management Trainee) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 60 ஆகும். இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரண்டு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவருக்கு துணை மேலாளர் பணி வழங்கப்படும்.
மேலும், பணியமர்த்தப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 40,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் EXIM வங்கி வலைதளம் (eximbankindia.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2020. இட ஒதுக்கீடு காலியிடங்கள் பற்றி அறிய வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
EXIM வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 25 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.12.2020.
- மேலும் வயது தளர்வு விவரங்களை பெற EXIM வங்கி விளம்பரத்தை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் முழுநேர (Full-time) அடிப்படையில் முதுகலை பட்டம்/ MBA/ PGDBA/ CA/ LLB/ பொறியியல் (Engineering)/ MCA/ B.Tech போன்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள EXIM வங்கி விளம்பரத்தை காணவும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- எழுத்துத் தேர்வு (Written test).
- நேர்காணல் (Interview).
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-
- விண்ணப்பக் கட்டணம் ரூ.600/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
- SC/ ST/ PWD பிரிவினர் ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பதாரர்கள் EXIM வங்கி வலைதளத்திற்கு (eximbankindia.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
- இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 31.12.2020.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (Export – Import Bank of India) |
பதவிகள் | மேலாண்மை பயிற்சியர் (Management Trainee) |
காலியிடங்கள் | 60 |
ஊதியம் | ரூ.40,000 |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.12.2020 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
விண்ணப்பிக்க (Online Application) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.