ஈரோடு மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2022 | வழக்கு பணியாளர் மற்றும் சில பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2022
Erode District Government Jobs 2022 | CW, MPH & Security Posts | 07 Vacancies | Application Form | Last Date: 31.01.2022 | erode.nic.in
Latest Erode District Government Jobs 2022 Notification – ஈரோடு மாவட்ட அரசு வலைதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One stop centre) பணிபுரிய வழக்கு பணியாளர் (Case Worker), பல் நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) மற்றும் பாதுகாவலர் (Security) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 07. இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்ட அரசு வலைத்தளத்தில் (erode.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.01.2022. வழக்கு பணியாளர் பதவிக்கு பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈரோடு வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Case Worker | 04 |
Multi Purpose Helper | 01 |
Security | 02 |
மொத்தம் (Total) | 07 |
ஈரோடு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
கல்வித் தகுதி (Educational Qualification):-
- வழக்கு பணியாளர் – சமூக பட்டப்படிப்பு/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- வழக்கு பணியாளர் & பல் நோக்கு உதவியாளர் – குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் (பெண்கள் மட்டும்) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- பல்நோக்கு உதவியாளர் – சமையல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரங்கள்:-
- வழக்கு பணியாளர் – ரூ. 15, 000/-
- பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400/-
- பாதுகாவலர் – ரூ. 10,000/-
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ஈரோடு மாவட்ட அரசு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்ட அரசு வலைத்தளத்தில் (erode.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை பின்வரும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு – 642 011.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.01.2022.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் ஈரோடு மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | சமூக நலத்துறை – ஒருங்கிணைந்த சேவை மையம் (One stop centre) |
பதவிகள் | Case Worker, Multi Purpose Helper & Security |
காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.01.2022 |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.