எண்ணூர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2021 | காமராஜர் துறைமுகம் | பைலட் பணி | 05 காலியிடங்கள் | நேர்காணல் நடைபெறும் நாள் – 08.07.2021
Ennore Port Recruitment 2021 | Kamarajar Port | Pilot Post | 05 Vacancies | Walk-in Date: 08.07.2021 | ennoreport.gov.in
Latest Ennore Port Recruitment 2021 Notification – KPL என்று அழைக்கப்படும் Kamarajar Port Limited (எண்ணூர் துறைமுகம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Pilot பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை 05 ஆகும். இந்த காலியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணல் நடைபெறும் நாள் 08.07.2021. தேந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகள் பணி அமர்த்தப் படுவார்கள். அவ்வாறு பனி அமர்த்தப்படும் நபர்களுக்கு பயிற்சியின் போது மாதம் ரூ.1,00,000/- ஊதியமாக வழங்கப்படும். பயிற்சியானது 6 மாதங்கள் அளிக்கப்படும்.
எண்ணூர் துறைமுகம் வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 55 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- Master (FG) ஆக Certificate of Competency பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- குறைந்தது ஒரு வருடம் வெளிநாடு செல்லும் கப்பல்களில் தலைமை அதிகாரியாக இருந்து கப்பல் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Walk-in Interview)
நேர்காணல் விவரங்கள் (Walk-in Details):-
- நாள் – 08.07.2021.
- பதிவு நேரம் – காலை 11 மணி.
- நேர்காணல் நேரம் – மதியம் 2 மணி.
- நடைபெறும் இடம் – Kamarajar Port Limited, 2nd floor (North Wing), Jawahar Building, No.17, Rajaji salai, Chennai-1.
நேர்காணலில் பங்கேற்கும் முறை (Walk-in Procedure):-
- நேர்காணலில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் எண்ணூர் துறைமுகம் வலைதளம் (ennoreport.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- நேர்காணல் அன்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் (Passport Size Photograph) ஆகியவற்றை எடுத்துச் சென்று பதிவு (Register) செய்துகொள்ள வேண்டும்.
- அன்று மதியம் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
இந்த நேர்காணலில் பங்கேற்கும் முன்னர் காமராஜர் துறைமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக நேர்காணலில் பங்கேற்கும் முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
நிறுவனம் | காமராஜர் துறைமுகம் (Kamarajar Port Limited) |
பதவி | Pilot |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | எண்ணூர் (Ennore) |
நேர்காணல் நடைபெறும் நாள் | 08.07.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.