DSSC Wellington Recruitment 2021 | 83 MTS, LDC & CMD Vacancies | Application Form

DSSC வெல்லிங்டன் வேலைவாய்ப்பு 2021 | சுருக்கெழுத்தாளர், ஓட்டுநர் மற்றும் சில பதவிகள் | 83 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.05.2021

DSSC Wellington Recruitment

DSSC Wellington Recruitment 2021 | Stenographer, LDV, MTS & various Posts | 83 Vacancies | Application Form | Last Date: 22.05.2021 | dssc.gov.in

Latest DSSC Wellington Recruitment 2021 Notification – Defence Services Staff College, Wellington அதாவது பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி, வெல்லிங்டன் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 01.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Stenographer, Lower Division Clerk (LDV), Civilian Motor Driver (CMD), Sukhani, Carpenter மற்றும் Multi Tasking Staff (MTS) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 83. இந்த காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக அவர்கள் தகுதிக்கேற்ப ரூ. 18,000/- முதல் ரூ. 81,100/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) DSSC வெல்லிங்டன் வலைதளத்திற்கு (dssc.gov.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.05.2021. இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

DSSC வெல்லிங்டன் வேலைவாய்ப்பு செய்தியின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Stenographer Grade II 04
Lower Division Clerk 10
Civilian Motor Driver (Ordinary Grade) 07
Sukhani 01
Carpenter 01
Multi Tasking Staff – (Office and Training) 60
மொத்தம் (Total) 83

DSSC வெல்லிங்டன் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • Sukhani, Carpenter & MTS பதவிகளுக்கு அதிகபட்ச வயது 25 ஆண்டுகள்.
  • Stenographer, LDC & CMD பதவிகளுக்கு அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 22/05/2021.
  • வயது தளர்வு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பன்னிரெண்டாம் வகுப்பு/ மெட்ரிகுலேசன்/ தொழிற்பயிற்சி (ITI) அல்லது இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித்தகுதிகளை தெரிந்துகொள்ள அறிவிப்பை காணவும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஓட்டுநர் (Civilian Motor Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் கனரக வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தச்சர் (Carpenter) பதவிக்கு விண்ணப்பிப்பவர் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • ஓட்டுநர் (Civilian Motor Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் Defence Services Staff College (DSSC) வெல்லிங்டன் அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test).
  • திறன்/ உடற்தகுதி தேர்வு (Skill/ Physical Test).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • எழுத்துத் தேர்விற்கு (Written Test) பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (General Intelligence and Reasoning), எண் திறன் (Numerical Aptitude), பொது ஆங்கிலம் (English Language), பொது விழிப்புணர்வு (General awareness) மற்றும் தொழிற் பிரிவு சம்மந்தப்பட்ட (Trade Specific) வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் DSSC வெல்லிங்டன் வலைதளத்திற்கு (dssc.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கையொப்பம் இடப்பட்ட புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.
  • விண்ணப்பத்துடன் ரூ. 22/- க்கான தபால்தலைகள் (Postage stamps) ஒட்டப்பட வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22/05/2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் DSSC வெல்லிங்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி, வெல்லிங்டன் – Defence Services Staff College, Wellington
பதவிகள் Stenographer, Lower Division Clerk (LDV), Civilian Motor Driver (CMD), Sukhani, Carpenter & Multi Tasking Staff (MTS)
காலியிடம்/ காலியிடங்கள் 83
ஊதியம் ரூ. 18,000 – ரூ. 81,100/-
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் (Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.05.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு