DHS திருச்சி வேலைவாய்ப்பு 2021 | மருத்துவ அலுவலர், ஆய்வக நுட்புனர் மற்றும் சில பதவிகள் | 31 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 20.11.2021
DHS Trichy Recruitment 2021 | LT, Accountant & other Posts | 31 Vacancies | Application Form | Last Date: 20.11.2021 | trichy.nic.in
Latest DHS Trichy Recruitment 2021 Notification – திருச்சிராப்பள்ளி மாவட்டச் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிய மருத்துவ அலுவலர் (TB Cell Medical Officer), நுண்ணுயிரியலாளர் (Microbiologist – Culture & DST Lab), முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS), காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV), முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians), ஆய்வக நுட்புனர் (LT), முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS), கணக்காளர் (Accountant) மற்றும் தரவு உள்ளீடு இயக்குனர் (Data entry operator) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 31.
இந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contract) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பதினொரு மாத ஒப்பந்த கால அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.11.2021. இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.
DHS திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
TB Cell Medical Officer | 01 |
Microbiologist – Culture & DST Lab | 01 |
STS | 02 |
TB-HV | 02 |
Senior Lab Technicians | 04 |
LT | 16 |
STLS | 03 |
Accountant | 01 |
Data entry operator | 01 |
மொத்தம் (Total) | 32 |
DHS திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
கல்வித் தகுதி (Educational Qualification):-
- 10+2/ MBBS/ இளங்கலை/ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் MD/ B.Sc/ Ph.D/ M.Sc./ DCA/ இளநிலை பட்டம்/ பட்டய படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு அவர்களது பதவிகளுக்கேற்ப பயிற்சி/ அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- கணினி பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் – இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- தரவு உள்ளீடு இயக்குனர் – தட்டச்சு எழுதுதலில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்/ MS Office தெரிந்திருக்க வேண்டும்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் DHS திருச்சி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தங்களின் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- விண்ணப்பத்துடன் ரூ. 5/- க்கான அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை மற்றும் கையொப்பமிட்ட விண்ணப்பக் கடிதத்துடன் இணைத்து பதிவஞ்சலில் (Registered Post) அனுப்ப வேண்டும்.
- முகவரி: துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசம்), மாவட்ட காசநோய் மையம், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம், புத்தூர், திருச்சிராப்பள்ளி – 620 017.
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.11.2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் DHS திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | திருச்சிராப்பள்ளி மாவட்டச் சுகாதார சங்கம் |
பதவிகள் | TB Cell Medical Officer, Microbiologist – Culture & DST Lab, STS, TB-HV, Senior Lab Technicians, LT, STLS, Accountant & Data entry operator |
காலியிடங்கள் | 31 |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 20.11.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.