தருமபுரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை | சமூக சேவகர் மற்றும் சில பதவிகள் | 14 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 16.11.2021
Dharmapuri District Government Jobs 2021 | SW, Security & various Posts | 14 Vacancies | Application Form | Last Date: 16.11.2021 | dharmapuri.nic.in
Latest Dharmapuri District Government Jobs 2021 Notification – தருமபுரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய Psychologist, Social Worker, Hospital Worker, Security, District IT Co- ordinator (LIMS), District Quality Consultant, Refrigeration Mechanic மற்றும் Dental Assistant பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 14. இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மாவட்ட வலைத்தளத்தில் (dharmapuri.nic.in) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். இந்த பதவிகளில் சேர சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.11.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த பணிநியமன அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Psychologist | 01 |
Social Worker | 05 |
Hospital Worker | 02 |
Security | 02 |
District IT Co-ordinator (LIMS) | 01 |
District Quality Consultant | 01 |
Refrigeration Mechanic | 01 |
Dental Assistant | 01 |
மொத்தம் (Total) | 14 |
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- District Quality Consultant – அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- Hospital Worker/ Security – எட்டாம் வகுப்பில் தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பு/ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் முதுநிலை/ தொழிற்பயிற்சி (ITI)/ MCA/ BE/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்ட துறைகளில் அவர்களது பதவிகளுக்கேற்ப ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரங்கள் (Remuneration Details):-
- Psychologist / Social Worker – ரூ. 18,000/-
- Hospital Worker – ரூ. 5,000/-
- Security – ரூ. 6,300/-
- District IT Co-ordinator (LIMS) – ரூ. 16,500/-
- District Quality Consultant – ரூ. 40,000/-
- Refrigeration Mechanic – ரூ. 20,000/-
- Dental Assistant – ரூ. 10,395/-
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் தருமபுரி மாவட்ட அரசு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தருமபுரி மாவட்ட அரசு வலைதளம் (dharmapuri.nic.in) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் (Application Form) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photograph) ஒட்டப்பட வேண்டும்.
- விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) இணைத்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ/ விரைவஞ்சல் (Speed post)/ பதிவஞ்சல் (Registered post) மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: நிருவாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வுச்சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், தர்மபுரி மாவட்டம் – 636 705.
- விண்ணப்பங்களை 16.11.2021 தேதி 5.00 PM க்கும் சமர்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தருமபுரி மாவட்ட அரசு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை |
பதவிகள் | Psychologist, Social Worker, Hospital Worker, Security, District IT Co- ordinator (LIMS), District Quality Consultant, Refrigeration Meachanic & Dental Assistant |
காலியிடங்கள் | 14 |
ஊதியம் | ரூ. 5,000 – ரூ. 40,000/- |
விண்ணப்பிக்கும் முறை | நேரில்/ விரைவஞ்சல் (Speed post)/ பதிவஞ்சல் (Registered post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 16.11.2021 |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.