CUB Recruitment 2021 | Latest Vacancies | Apply Online

CUB வேலைவாய்ப்பு 2021 | சுருக்கெழுத்தாளர் மற்றும் சில பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.05.2021

CUB Recruitment

CUB Recruitment 2021 | Kumbakonam | Inspector of Branches, Stenographer, Staff College Faculty & other vacancies | Apply Online | Last Date: 07.05.2021 | cityunionbank.com

Latest CUB Recruitment 2021 Notification – City Union Bank (CUB), Kumbakonam அதாவது சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின்படி Inspector of Branches, Staff College Faculty, Stenographer, Hindi Translator மற்றும் Receptionist / Telephone Operator பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் Industry Standards அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் CUB வலைதளத்தில் (cityunionbank.com) இணைய வழியில் (Online) மட்டும் விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online  Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.05.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் கும்பகோணத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

CUB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • Inspector of Branches – குறைந்தபட்ச வயது 45 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 55 ஆண்டுகள்.
  • Staff College Faculty – அதிகபட்ச வயது 60 ஆண்டுகள்.
  • Stenographer / Hindi Translator – குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • Receptionist / Telephone Operator – குறைந்தபட்ச வயது 22 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • Inspector of Branches – இளநிலை பட்டம்/ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Staff College Faculty – முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Stenographer/ Hindi Translator/ Receptionist/ Telephone Operator – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள CUB அறிவிப்பை காணவும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதிக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளில் 1 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • Inspector of Branches பதவிக்கு விண்ணப்பிப்பவர் வங்கியின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் / RBI வழிகாட்டுதல்கள் / சுற்றறிக்கைகளில் முழுமையான அறிவு பெற்றிருத்தல் வேண்டும். JAIIB/ CAIIB தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • Stenographer பதவிக்கு விண்ணப்பிப்பவர் தட்டச்சு எழுதுதலில் (Typewriting) ஆங்கிலத்திலும் தமிழிலும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் CUB அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்புவோர் CUB வலைதளத்தில் (cityunionbank.com) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07/05/2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் CUB அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி – City Union Bank (CUB)
பதவிகள் Inspector of Branches, Staff College Faculty, Stenographer, Hindi Translator & Receptionist / Telephone Operator
பணியிடம் கும்பகோணம்
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.05.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு