CMRL வேலைவாய்ப்பு 2021 | மேலாளர் பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.12.2021
CMRL Recruitment 2021 | GM (Operations) Post | 01 Vacancy | Application Form | Last Date: 02.12.2021 | chennaimetrorail.org
Latest CMRL Recruitment 2021 Notification – CMRL என்று அழைக்கப்படும் Chennai Metro Rail Limited அதாவது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (CMRL/HR/DEP/14/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி பொது மேலாளர் (General Manager [Operations]) பதவிக்கு 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவத்தினை (Application Form) சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வலைதளத்தில் (chennaimetrorail.org) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.12.2021. காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் சென்னை மெட்ரோ நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Deputation முறை படி பணி அமர்த்தப்படுவார்கள். பணிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும். பணியாளர்களின் செயல் திறனை கொண்டு மேலும் 5 ஆண்டுகள் பணிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
CMRL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகப் பட்ச வயது 55 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 18.10.2021.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- ரயில்வே சார்ந்த துறைகளில் குறைந்தது 20 ஆண்டுகள் (SAG Grade) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவத்தினை (Application Form) சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வலைதளத்தில் (chennaimetrorail.org) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- அனுப்ப வேண்டிய முகவரி, Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.12.2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் CMRL வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (Chennai Metro Rail Limited) |
அறிவிப்பு எண் | CMRL/HR/DEP/14/2021 |
பதவி | பொது மேலாளர் (General Manager [Operations]) |
காலியிடம் | 01 |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் (Post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 02.12.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) )/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.