CMDA Recruitment 2021 | New Vacancies | Application Form

CMDA வேலைவாய்ப்பு 2021 | GIS ஆய்வாளர் பதவி | 02 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 17.11.2021

CMDA Recruitment

CMDA Recruitment 2021 | GIS Analyst Post | 02 Vacancies | Application Form | Last Date: 17.11.2021 | cmdachennai.gov.in

Latest CMDA Recruitment 2021 Notification – Chennai Metropolitan Development Authority (CMDA) என்று அழைக்கப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (C1/MPU/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி GIS ஆய்வாளர் (GIS Analyst) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 02. இந்த பதவிக்கு காலியிடங்களை நிரப்ப அனுபவமும் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை உள்ளடக்கிய தற்குறிப்பை (Resume) அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.11.2021. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒரு வருட ஒப்பந்த (contract basis) பணிநியமன அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

CMDA வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • புவியியல் (Geography)/ நகர்ப்புற திட்டமிடல் (Urban Planning)/ நிலவியல் (Geology)/ தொலை உணர்வு (Remote Sensing) ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • GIS (ArcGIS/ QGIS/ Map Info etc.) பயன்படுத்தி புவியியல் பகுப்பாய்வு (geospatial analysis) நடத்துவதில் ஐந்து வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை உள்ளடக்கிய தற்குறிப்பை (Resume) பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • மின்னஞ்சல் முகவரி: mscmda@tn.gov.in
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17/11/2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் CMDA அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் – Chennai Metropolitan Development Authority (CMDA)
அறிவிப்பு எண் C1/MPU/2021
பதவிகள் GIS ஆய்வாளர் (GIS Analyst)
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள் 17.11.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு