CISF வேலைவாய்ப்பு 2021 | உதவி ஆய்வாளர் & காவலர் பதவிகள் | 2000 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.03.2021
CISF Recruitment 2021 | SI, ASI, Head Constable & Constable Posts | 2000 Vacancies | Application Form | Last Date: 15.03.2021 | cisf.gov.in
Latest CISF Recruitment 2021 Notification – Central Industrial Security Force எனப்படும் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (DAVP 19113/ 11/ 0002/ 2021) ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி SI (Exe.), ASI (Exe.), Head Constable/ GD மற்றும் Constable/ GD பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 2000 ஆகும். இந்த பணிகளில் ஈடுபடுவதற்காக இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒரு வருட ஒப்பந்த (Contract) பணிநியமன அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் CISF வலைதளம் (cisfrectt.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் மின்னஞ்சல் (E-mail) மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.03.2021.
CISF வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
SI/ Exe | 63 |
ASI/ Exe | 187 |
HC/ GD | 424 |
Constable/ GD | 1326 |
மொத்தம் (Total) | 2000 |
CISF வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- 50 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேவைப்படும் தகுதி (Required Qualification):-
- SI/ Exe பதவிக்கு விண்ணப்பிப்பவர் இந்திய ராணுவத்தில் Subedar அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்திருந்திருக்க வேண்டும்.
- ASI/ Exe பதவிக்கு விண்ணப்பிப்பவர் இந்திய ராணுவத்தில் Naib Subedar அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்திருந்திருக்க வேண்டும்.
- HC/ GD பதவிக்கு விண்ணப்பிப்பவர் இந்திய ராணுவத்தில் Havildar அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்திருந்திருக்க வேண்டும்.
- Constable/ GD பதவிக்கு விண்ணப்பிப்பவர் இந்திய ராணுவத்தில் சிப்பாய் (Sepoy) அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்திருந்திருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
- உடற் தகுதி தேர்வு (Physical Standard Test)
- Qualitative Assessment (Discharge Certificate)
- மருத்துவ பரிசோதனை (Medical Examination)
- தகுதிப் பட்டியல் (Merit List)
ஊதிய விவரங்கள் (Salary Details):–
- SI/Exe – 40,000/-
- ASI/Exe – 35,000/-
- HC/GD – 30,000/-
- Constable/GD – 25,000/-
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் CISF வலைதளம் (cisfrectt.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் மின்னஞ்சல் (E-mail) மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
- மின்னஞ்சல் முகவரிகளை CISF அறிவிப்பில் பெற்றுக்கொள்ளவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.03.2021.
விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் CISF அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force) |
அறிவிப்பு எண் | DAVP 19113/ 11/ 0002/ 2021 |
பதவிகள் | SI(Exe.), ASI (Exe.), Head Constable/ GD & Constable/ GD |
காலியிடங்கள் | 2000 |
விண்ணப்ப முறை | மின்னஞ்சல் (E-mail) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.03.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.