CGHS சென்னை வேலைவாய்ப்பு 2021 | மருந்தாளர் மற்றும் பல பணிகள் | 16 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.10.2021
CGHS Chennai Recruitment 2021 | GDMOS, Specialists & Pharmacists Posts | 16 Vacancies | Application Form | Last Date: 18.10.2021 | cghschennai.tn.nic.in
Latest CGHS Chennai Recruitment 2021 Notification – Central Government Health Scheme (CGHS) அதாவது மத்திய அரசு சுகாதார திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Medical Specialist, Gynecologist, Pediatrician, Dermatologist, Ophthalmologist, ENT Specialist, General Duty Medical Officer மற்றும் Pharmacist (Allopathy) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 16. இந்த பதவிகளுக்கு ஓய்வு பெற்ற மருத்துவர்கள் (Doctors), நிபுணர் (Specialist) மற்றும் மருந்தாளுநர்களிடம் (Pharmacists) இருந்து ஒப்பந்த (Contract Basis) அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக அவர்களது பதவிகளுக்கேற்ப ரூ.25,500/- முதல் ரூ.1,05,000/- வரை வழங்கப்படும். GDMO/ Specialist பதவிகளுக்கு ஒப்பந்த காலம் (Contract Period) ஒரு வருடம் மற்றும் Pharmacist பதவிக்கு ஒப்பந்த காலம் (Contract Period) 180 நாட்கள் ஆக இருக்கும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 18.10.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
CGHS சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Medical Specialist | 03 |
Gynecologist | 01 |
Pediatrician | 02 |
Dermatologist | 02 |
Ophthamologist | 01 |
ENT Specialist | 01 |
General Duty Medical Officer | 03 |
Pharmacist (Allopathy) | 03 |
மொத்தம் (Total) | 16 |
CGHS சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 68 ஆண்டுகள்.
- Pharmacist (Allopathy) – அதிகபட்ச வயது 64 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- MBBS/ முதுநிலை/ B.Pharm/ மருந்தகத்தில் பட்டயடிப்பு (Dip in Pharmacy) முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தற்குறிப்பு (Bio-Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: Office of the Additional Director, CGHS, E-2-C, Rajaji Bhavan, Besant Nagar, Chennai – 600 090.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.10.2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் CGHS சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | சென்னை மத்திய அரசு சுகாதார திட்டம் – Central Government Health Scheme (CGHS), Chennai |
பதவிகள் | GDMOS, Specialists & Pharmacists |
காலியிடம்/ காலியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 18.10.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) / விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.