BRO Recruitment 2021 | 627 GREF Vacancies | Application Form

BRO வேலைவாய்ப்பு 2021 | எல்லை சாலைகள் அமைப்பு | 627 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 75 நாட்கள்

BRO Recruitment

BRO Recruitment 2021 | GREF | Multi Skilled Worker & Other Posts | 627 Vacancies | Application From | Last Date: 75 days | bro.gov.in

Latest BRO Recruitment 2021 Notification – Border Roads Organization அதாவது எல்லை சாலைகள் அமைப்பு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (ADVT No 01/2021) ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி General Reserve Engineer Force என்னும் படையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker மற்றும் Store Keeper Technical ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 627 ஆகும்.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) எல்லை சாலைகள் அமைப்பு (BRO) வலைதளம் சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அசாம், மேகாலயா போன்ற தொலை தூர மாநிலங்களை சேர்ந்த நபர்கள் அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

BRO வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Draughtsman 43
Supervisor Store 11
Radio Mechanic 04
Lab Assistant 01
Multi Skilled Worker (Mason) 100
Multi Skilled Worker (Driver Engine Static) 150
Store Keeper Technical 318
மொத்தம் (Total) 627

Border Roads Organization வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 27 ஆண்டுகள்.
  • Multi Skilled Worker பணிக்கு அதிகப்பட்ச வயது 25 ஆண்டுகள்.
  • வயது தளர்வு விவரங்களை பெற Border Roads Organization அறிவிப்பை படிக்கவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • Matriculation/ 10+2/ தொழிற்பயிற்சி (ITI)/ பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • முக்கியமாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவிகளில் பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • Store Keeper பணிக்கு விண்ணப்பிப்பவர் மூன்று வருடங்கள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • உடற்திறன் தேர்வு (Physical Efficiency Test)
  • செயல்திறன் தேர்வு [Practical Test (Trade Test)]

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
  • அறிவிப்பில் கொடுத்துள்ள இணைப்பில் (Payment Link) கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) எல்லை சாலைகள் அமைப்பு (BRO) வலைத்தளம் சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு பதிவஞ்சல் (Registered Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி, Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune – 411 015.
  • விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொலைத்தூர மாநிலங்களை சேர்ந்தவர்கள் அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் Border Roads Organization அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் எல்லை சாலைகள் அமைப்பு (Border Roads Organization)
அறிவிப்பு எண் Advt. No. 01/2021
பதவிகள் Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker & Store Keeper Technical
காலியிடங்கள் 627
ஊதியம்
  • குறைந்த பட்சம் – ரூ.18000/-
  • அதிகப் பட்சம் – ரூ.92300/-
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்ப கட்டணத்திற்கு (Application Fee) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட விவரம் இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு