BHEL வேலைவாய்ப்பு 2021 | மருத்துவ அதிகாரிகள் பதவி | 28 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 25.11.2021
BHEL Recruitment 2021 | General Duty Medical Officer Posts | 28 Vacancies | Apply Online | Last Date: 25.11.2021 | bhel.com
Latest BHEL Recruitment 2021 Notification – Bharat Heavy Electricals Limited (BHEL) அதாவது பாரத மிகுமின் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (HWR 04/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மருத்துவ அதிகாரிகள் (GENERAL DUTY MEDICAL OFFICERS) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 28. இந்த பதவிக்கு காலியிடங்களை நிரப்ப தகுதியான மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.83,000/- மற்றும் சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் BHEL வலைதளத்திற்கு (bhel.com) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பதவிக்கால நியமனம் FIXED TENURE APPOINTMENT அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 37 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.11.2021.
- மேலும் வயது தளர்வு விவரங்களை பெற BHEL அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- இந்திய மருத்துவ கவுன்சிலால் (Medical Council of India) அங்கீகரிக்கப்பட்டு MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் தகுதிகள் (Required Qualification):-
- மாநில மருத்துவ கவுன்சிலில் (State Medical Council)/ இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் BHEL அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Personal Interview)
செயலாக்க கட்டணம் (Processing Fee):-
- செயலாக்க கட்டணம் – ரூ. 300/- இணைய வழி (Online) மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் BHEL வலைதளத்திற்கு (bhel.com) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படும் (Photograph), கையொப்பம் (Signature), கல்வித்தகுதி, மதிப்பெண் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
- விண்ணப்பித்த பிறகு ஒப்புகை எண் (Acknowledge Number) கொடுக்கப்படும்.
- இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2021.
விண்ணப்பதாரர் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் BHEL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | பாரத மிகுமின் நிறுவனம் – Bharat Heavy Electricals Limited (BHEL) |
அறிவிப்பு எண் | HWR 04/2021 |
பதவிகள் | GENERAL DUTY MEDICAL OFFICERS |
காலியிடம்/ காலியிடங்கள் | 28 |
ஊதியம் | ரூ.83,000/- |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 25.11.2021 |
விண்ணப்பிக்க (Online Application) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.