BHEL Ranipet Recruitment 2021 | 60 Apprentices Vacancies | Apply Online

BHEL இராணிப்பேட்டை வேலைவாய்ப்பு 2021 | தொழில் பழகுநர் பயிற்சி | 60 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.03.2021

BHEL Ranipet Recruitment

BHEL Ranipet Recruitment 2021 | Apprenticeship Training | Technician Apprentices | 60 Vacancies | Apply Online | Last Date: 06.03.2021 | bapscm.bhel.in

Latest BHEL Ranipet Recruitment 2021 Notification – BHEL Boiler Auxiliaries Plant (BAP), இராணிப்பேட்டை நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி (Apprenticeship Training) பெறுவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பட்டய படிப்பு (Diploma) முடித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்காக (Technician (Diploma) Apprentice) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 60 (Mech. – 35, EEE – 06, ECE – 05, Civil – 10 & CSC – 04) ஆகும்.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் முதலில் NATS வலைதளத்தில் (mhrdnats.gov.in) இணைய வழியில் (Online) பதிவு (Enrollment) செய்ய வேண்டும். பிறகு தற்குறிப்புடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல்/ மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.03.2021 ஆகும். இந்த பயிற்சியானது ஓர் ஆண்டு வழங்கப்படும். பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

BHEL இராணிப்பேட்டை வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • தொழில் பழகுநர் பயிற்சி விதிமுறைகளின் படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டய படிப்பு (Diploma) முடித்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Procedure):-

  • 2020, 2019 மற்றும் 2018 ஆண்டுகளில் பட்டயப்படிப்பு முடித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் முதலில் தொழில்பழகுநர் பயிற்சி வாரியத்தின் NATS என்று சுருக்கமாக அளிக்கப்படும் National Apprenticeship Training Scheme வலைதளத்தில் (mhrdnats.gov.in) இணைய வழியில் (Online) பதிவு செய்ய வேண்டும்.
  • பிறகு தற்குறிப்புடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல்/ மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.03.2021 ஆகும்.
  • அஞ்சல் முகவரி, The Dy. Manager, HRDC, BHEL, Ranipet PO & DT., Pincode – 632406.
  • மின்னஞ்சல் முகவரி, dks@bhel.in.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன்னர் பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) இராணிப்பேட்டை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை  தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே  விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் BAP, BHEL, இராணிப்பேட்டை
பயிற்சி தொழில் பழகுநர் பயிற்சி (Apprenticeship Training)
காலியிடங்கள் 60
உதவித் தொகை ரூ.8,000
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் (Post)/ மின்னஞ்சல் (E-mail)
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.03.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு