BEL Chennai Recruitment 2021 | 73 Apprentices Vacancies | Apply Online

BEL சென்னை வேலைவாய்ப்பு 2021 | தொழில் பழகுநர் பயிற்சி | 73 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.11.2021

BEL Chennai Recruitment

BEL Chennai Recruitment 2021 | Apprenticeship training | Apply Online | Last Date: 25.11.2021 | bel-india.in

Latest BEL Chennai Recruitment 2021 Notification – BHARAT ELECTRONICS LIMITED (BEL), Chennai அதாவது சென்னை பாரத மின்னணு நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி பொறியியல் படித்தவர்களுக்கும் (Graduate Apprentices) மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கும் (Technician Apprentices) தொழில் பழகுநர் பயிற்சிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 73. இப்பயிற்சிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், பயிற்சியளிக்கப்டும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக பொறியியல் படித்தவர்களுக்கு  ரூ.11,110/- மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கும் ரூ.10,400/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் (mhrdnats.gov.in) பதிவு செய்த பின்னர் பதிவு விவரத்தைக் கொண்டு இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி 25.11.2021. சென்னை BEL நிறுவன தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2021 ஆகும். மேலும், இந்த தொழில்பழகுநர் பயிற்சியானது ஓர் ஆண்டு வழங்கப்படும்.

BEL வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Electronics and Communication Engineering 28
Mechanical Engineering 25
Electrical and Electronics Engineering 05
Computer Science Engineering 03
Civil Engineering 02
Electronics and Communication Engineering (TA) 05
Mechanical Engineering (TA) 05
மொத்தம் (Total) 73

BEL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பொறியியல் (Engineering)/ தொழில்நுட்பம் (Technology) அல்லது பட்டயப் படிப்பு (Diploma) முடித்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • மதிப்பெண் அடிப்படை (percentage of marks)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் முதலில் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் (mhrdnats.gov.in) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி 10.11.2021.
  • பின்னர் பதிவு விவரத்தைக் கொண்டு சென்னை BEL நிறுவன தொழில் பழகுநர் பயிற்சிக்கு இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2021.
  • பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி (Online) விண்ணப்பத்துடன் தற்குறிப்பு (Resume) பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் சென்னை BEL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாரத் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் – BHARAT ELECTRONICS LIMITED (BEL)
பதவிகள் Graduate Apprentices/ Technician Apprentices
காலியிடங்கள் 73
ஊதியம் Graduate Apprentices – ரூ. 11,110/-

Technician Apprentices – ரூ. 10,400/-

விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு