ஆவின் திருப்பூர் வேலைவாய்ப்பு 2021 | மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகள் | 04 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.02.2021
AAVIN Tiruppur Recruitment 2021 | Tirupur DCMPU | Manager & Dy. Manager posts | 04 Vacancies | Apply Online | Last Date: 11.02.2021 | tirupuraavin.com
Latest AAVIN Tiruppur Recruitment 2021 Notification – The Tirupur District Co-operative Milk Producers’ Union Ltd. (Tirupur DCMPU) அதாவது திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்திகளின் படி மேலாளர் (Manager – Engg.) மற்றும் துணை மேலாளர் (Deputy Manager – Marketing) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 04 ஆகும். மேலாளர் பணிக்கு ஒரு காலியிடமும் மற்றும் துணை மேலாளர் பணிக்கு மூன்று காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் திருப்பூர் ஆவின் வலைதளத்திற்கு (tirupuraavin.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.02.2021. இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.36700/- முதல் அதிகபட்சம் ரூ.118200/- வரை மேலாளர் பணிக்கும் மற்றும் குறைந்தபட்சம் ரூ.36900/- முதல் அதிகபட்சம் ரூ.116600/- வரை துணை மேலாளர் பணிக்கும் வழங்கப்படும்.
ஆவின் திருப்பூர் வேலைவாய்ப்பு செய்திகளின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
- அதிகப்பட்ச வயது 30 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.01.2021.
- மேலும் வயது தளர்வு விவரங்களை பெற ஆவின் திருப்பூர் விளம்பரத்தை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- Manager (Engineering) – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளில் பொறியியல் (Engineering) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Deputy Manager (Marketing) – ஏதேனும் ஒரு பட்டத்துடன் (Degree) MBA அல்லது முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma) முடித்திருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:-
- எழுத்துத் தேர்வு (Written Test).
- நேர்காணல் (Oral Test).
விண்ணப்பக் கட்டணம்:-
- OC/ MBC/ BC/ DNC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 250/-
- SC/ SC (A)/ ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 100/-
- விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலை [Demand Draft (DD)] மூலம் அல்லது இணைய வழியில் (Online) செலுத்த வேண்டும்.
- வரைவோலை விவரங்களை ஆவின் திருப்பூர் விளம்பரத்தில் பெற்று கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் திருப்பூர் ஆவின் வலைதளத்திற்கு (tirupuraavin.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
- இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11/02/2021.
இந்த ஆவின் திருப்பூர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | The Tirupur District Co-operative Milk Producers’ Union Ltd. |
பதவிகள் | Manager & Deputy Manager |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | திருப்பூர் (Thiruppur) |
கட்டணம் செலுத்தும் முறை | வரைவோலை [Demand Draft (DD)] & இணைய வழி (Online) |
விண்ணப்ப முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 11.02.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
விண்ணப்பிக்க (Apply Online) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.