Aavin Namakkal Recruitment 2021 | Latest Vacancies | Application Form

ஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு 2021 | துணை மேலாளர், நிர்வாகி மற்றும் சில பதவிகள் | 14 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 06.02.2021

Aavin Namakkal Recruitment

AAVIN Namakkal Recruitment 2021 | Jr. Executive and other Posts | 14 Vacancies | Application Form | Last Date: 06.02.2021 | aavinmilk.com

Latest AAVIN Namakkal Recruitment 2021 Notification – Namakkal District Co-operative Milk Producers’ Union Limited (Namakkal DCMPU) அதாவது நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (1026/ Admin/ Direct Recruitment/ 2020) ஒன்றை 21.01.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி துணை மேலாளர் (Deputy Manager), நிர்வாகி (Executive), இளநிலை நிர்வாகி (Junior Executive) மற்றும் Extension Officer Grade II பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆகும்.

விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக அவர்களது பணிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,500/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவின் பால் வலைதளத்திற்கு (aavinmilk.com) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.02.2021.

ஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Deputy Manager (System) 01
Deputy Manager (Marketing) 03
Executive (Office) 04
Junior Executive (Office) 03
Extension Officer Grade II 03
மொத்தம் (Total) 14

ஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/01/2021.
  • SC/ SCA/ ST/ MBC/ DNC/ BC பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • B.E (I.T)/ MCA/ MBA/ B.A (Co.op)/ B.Com (Co.op)/ இளநிலை பட்டம்/ முதுநிலை பட்டத்துடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முக்கியமாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள ஆவின் நாமக்கல் விளம்பரத்தை காணவும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • தமிழ் மொழியில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ஆவின் நாமக்கல் அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு  விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test).

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • OC/ MBC/ BC  பிரிவினருக்கு – ரூ.250/-
  • SC/ SCA/ ST பிரிவினருக்கு – ரூ.100/-
  • விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலை [Demand Draft (DD)] மூலம் செலுத்த வேண்டும்.
  • செலுத்தப்பெற்ற கட்டணம் திரும்பப்பெற மாட்டாது.
  • வரைவோலை விவரங்களை ஆவின் நாமக்கல் விளம்பரத்தில் பெற்று கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • ஆவின் பால் வலைதளத்திற்கு (aavinmilk.com) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் வரைவோலை (DD) இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The General Manager, Namakkal District Co-operative Milk Producers’ Union Limited, 1/1167, Paramathi Road, E.B.Colony (PO), Namakkal – 637 001.
  • விண்ணப்பங்கள் பதிவஞ்சல் (Registered post) / விரைவஞ்சல் (Speed post) மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை 06/02/2021 தேதி மாலை 5:30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நிறுவனம் The Namakkal District Co-operative Milk Producers’ Union Ltd.
அறிவிப்பு எண் 1026/ Admin/ Direct Recruitment/ 2020
பதவிகள் Deputy Manager, Executive, Junior Executive & Extension Officer Grade II
காலியிடங்கள் 14
பணியிடம் நாமக்கல்
ஊதியம் குறைந்தபட்சம் ரூ.19,500/-

அதிகபட்சம் ரூ.1,16,500/-

கட்டணம் செலுத்தும் முறை வரைவோலை [Demand Draft (DD)]
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல் (Registered post)/ விரைவஞ்சல் (Speed post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.02.2021 (05:30 PM)
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு