Aavin Coimbatore Recruitment 2021 | DM, Driver and Technician Vacancies | Application Form

ஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுநர் மற்றும் சில பதவிகள் | 09 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.02.2021

Aavin Coimbatore Recruitment

Aavin Coimbatore Recruitment 2021 | Deputy Manager, Driver and Technician Posts | 09 Vacancies | Application Form | Last Date: 22.02.2021 | aavinmilk.com

Latest Aavin Coimbatore Recruitment 2021 Notification – Aavin Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited (Coimbatore DCMPU) அதாவது கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (4545/ESTT-1/2021) ஒன்றை 03/02/2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி துணை மேலாளர் (Deputy Manager), ஓட்டுநர் (Driver) மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 09 ஆகும். இந்த பதவிகளை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக அவர்களது பணிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவின் பால் வலைதளத்திற்கு (aavinmilk.com) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.02.2021.

ஆவின் கோவை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Deputy Manager (System) 01
Driver (LVD) 03
Technician(Lab) 05
மொத்தம் (Total) 09

ஆவின் கோவை வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/01/2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற ஆவின் கோவை அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • எட்டாம் வகுப்பு/ SSLC/ MCA/ பட்டய படிப்பு (Diploma)/ பொறியியல் (Engineering) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • முக்கியமாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள ஆவின் கோவை விளம்பரத்தை காணவும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர் மூன்று ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பிற தகுதிகள் (Other Qualification):-

  • தமிழ் மொழியில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர் செல்லத்தக்க இலகுரக வாகனம் (LVD) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ஆவின் கோவை அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test).
  • நேர்காணல் (Oral Test).
  • கல்வி தகுதி (Academic Qualification).
  • ஓட்டுநர் திறன் சோதனை (Driving ability test).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • துணை மேலாளர் (Manager) பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written Test) 85 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்காணல் (Interview) 15 மதிப்பெண்களுக்கும் மொத்தமாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைப்பெறும்.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • OC/ MBC/ BC/ DNC பிரிவினருக்கு – ரூ.250/-
  • SC/ SCA/ ST பிரிவினருக்கு – ரூ.100/-
  • விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலை [Demand Draft (DD)] மூலம் செலுத்த வேண்டும்.
  • வரைவோலை விவரங்களை ஆவின் கோவை விளம்பரத்தில் பெற்று கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • ஆவின் பால் வலைதளத்திற்கு (aavinmilk.com) சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் வரைவோலையை [Demand Draft (DD)] இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவஞ்சல் (Registered post)/ விரைவஞ்சல் (Speed post) மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The General Manager, The Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010.
  • விண்ணப்பங்களை 22/02/2021 தேதி மாலை 5:30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் ஆவின் கோவை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited (Coimbatore DCMPU)
அறிவிப்பு எண் 4545/ ESTT-1/ 2021
பதவிகள் Deputy Manager, Driver & Technician
காலியிடங்கள் 09
பணியிடம் கோவை
ஊதியம் ரூ.19,500 – ரூ.1,13,500/-
கட்டணம் செலுத்தும் முறை வரைவோலை [Demand Draft (DD)]
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல் (Registered post) / விரைவஞ்சல் (Speed post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு