AAI Recruitment 2021 | Doctor Vacancy | Application Form

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2021 | மருத்துவ ஆலோசகர் பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.03.2021

AAI Recruitment

AAI Recruitment 2021 | Chennai | Medical Consultant Post | Application Form | Last Date: 01.03.2021 | aai.aero

Latest AAI Recruitment 2021 Notification – Airports Authority of India (AAI) அதாவது இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மருத்துவ ஆலோசகர் (Medical Consultant) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடத்தை தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) நிரப்ப தகுதியான மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான பணிக்காலம் ஒரு வருடமாக இருக்கும், பணி காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ஒரு நாளில் முதல் 06 மணி நேரத்திற்கு ரூ.3000/- மற்றும் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் ரூ.500/- வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி  அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணைய (AAI) வலைதளத்திற்கு (aai.aero) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.03.2021.

இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • குறைந்தபட்சம் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • பட்டப் படிப்பிற்கு பிறகு குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அதில் ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக (House Surgeon) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview).

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Airports Authority of India (AAI) வலைதளத்திற்கு (aai.aero) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The General Manager (HR), Airports Authority of India, Regional Headquarters, Southern Region, Operational Offices Complex, Meenambakkam, Chennai-27.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.03.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India)
பதவிகள் மருத்துவ ஆலோசகர் (Medical Consultant)
பணியிடம் சென்னை
விண்ணப்ப முறை விரைவு அஞ்சல் (Speed Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.03.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு